Home வணிகம்/தொழில் நுட்பம் விஜய் சேதுபதி மலேசியா வருகை!

விஜய் சேதுபதி மலேசியா வருகை!

2121
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலபார் தங்க மற்றும் வைர ஆபரணக் கடையின் இரண்டாவது கிளையை திறந்து வைப்பதற்காக தென்னிந்திய திரையுலக நாயகன் விஜய் சேதுபதி மலேசியா வந்திருக்கிறார். இன்று வியாழக்கிழமை மாலை 5:00 மணிக்கு ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்துள்ள அக்கடையினை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடை திறப்பு விழாவிற்குப் பிறகு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, அதாவது 9-ம் தேதி வரையிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருப்பதோடு, நூறு விழுக்காடு பணத்தை திரும்பப் பெறுவதற்கான பற்றுச்சீட்டை பெற்று, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி வருகிறார் என்ற செய்தி நாளிதழ் மற்றும் வானொலிகளில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இன்று மஸ்ஜிட் இந்தியாவில் அவரது வருகையை முன்னிட்டு மக்கள் திரளாக வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.