Home கலை உலகம் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி

806
0
SHARE
Ad

சென்னை : தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்தாலும், அடுத்தடுத்து பிரபல நடிகர்களின் படங்களில் வில்லனாகத் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய் சேதுபதி.

ஒரு பக்கம் தனியாக, கதாநாயகனாக நடித்துக் கொண்டே, தனது தோற்றத்தைப் பற்றி கவலைப்படாமல் வில்லனாகவும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக கலக்கியவர், அடுத்து யாரும் எதிர்பாராமல் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லனாக அனைவரையும் கவர்ந்தார்.

#TamilSchoolmychoice

இப்போது அதே மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தையும் இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் கமலுக்கு வில்லனாக மிரட்ட வருகிறார் விஜய் சேதுபதி.

இதே படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹாட் பட்சிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் கமல்ஹாசன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மீண்டும் திரையுலகில் தீவிரமாக ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“விக்ரம்” படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபடவிருக்கும் கமல், இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடர்வதற்காக, படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, இயக்குநர் ஷங்கர் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதோடு, இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கமல் பங்கு கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.