Home நாடு நஜிப் மகன் மீதும் வருமானவரி இலாகா திவால் வழக்கு

நஜிப் மகன் மீதும் வருமானவரி இலாகா திவால் வழக்கு

519
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வருமான வரி பாக்கிக்காக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது வழக்கு தொடுத்திருக்கும் உள்நாட்டு வருமானவரி இலாகா, அதைத் தொடர்ந்து அவரைத் திவாலாக்கும் மற்றொரு வழக்கையும் பதிவு செய்திருக்கிறது.

இதே போன்று, நஜிப்பின் மகன் டத்தோ முகமட் நசிபுடின் 37.6 மில்லியன் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற வழக்கும் நிலுவையில் இருந்து வருகின்றது. இந்தத் தொகையை முகமட் நசிபுடின் இதுவரை செலுத்தாமல் இருப்பதால் அவர் மீதும் திவால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அவர் மீதான திவால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று அந்த வழக்கு மீதான விசாரணை இயங்கலை வழி நடத்தப்பட்டது. அந்த விசாரணையின்போது நசிபுடினின் வழக்கறிஞர் வீ இயோங் காங் கடந்த மே 6-ஆம் தேதி திவால் வழக்கை எதிர்க்கும் மனுவைச் சமர்ப்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் திவால் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மற்றொரு மனுவை எதிர்வரும் ஜூன் 9-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் நசிபுடினின் வழக்கறிஞர் தெரிவித்தார்.