கோலாலம்பூர் : ஓர் எதிர்க்கட்சித் தலைவர் – அவரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை உள்நாட்டு வருமான வரி வாரியம் முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த எதிர்க்கட்சித் தலைவர் நடப்பு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்சா சைனுடின் எனவும் ஆரூடங்கள் தெரிவிக்கின்றன.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது மேற்கொண்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக அவரின் சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
எனினும் வருமான வரி வாரியமோ, ஊழல் தடுப்பு ஆணையமோ அந்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை இதுவரையில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
கடந்த ஜூன் மாதம், கோலாலம்பூரில் உள்ள ஹம்சாவின் இல்லத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்குகள் மற்றும் சொத்துடமைகள் தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என்றும் அவற்றைக் கைவிட வேண்டும் என்றும் ஹம்சா சைனுடின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஏற்கனவே, மொகிதின் யாசின் மீதும் ஊழல், அதிகார விதிமீறல் குற்றச்சாட்டுள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. சில குற்றச்சாட்டுகளில் இருந்து உயர் நீதிமன்றமும் மொகிதினை அண்மையில் விடுதலை செய்தது.