கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன், இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஊழலுக்கு எதிராகப் போராடும் வீரராக, வயதான தோற்றத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். சேனாபதி எனும் பெயரைக் கொண்டு, ஊழலுக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டத்தைக் கதைக் களம் மையப்படுத்தியிருக்கும்.
இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று வெளியிட்டது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கும் வேளையில், இப்படத்திற்கான ஒளிப்பதிவு வேளைகளை ரவி வர்மன் கவனிக்கிறார்.
இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் தென் கொரிய நாட்டு நடிகை ஒருவரும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.