Home நாடு சுரங்க சாலை சரிவு: இம்பி – ஹங் துவா இரயில் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்!

சுரங்க சாலை சரிவு: இம்பி – ஹங் துவா இரயில் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்!

565
0
SHARE
Ad

Kuala Lumpur under construction tunnel caves inகோலாலம்பூர், ஜூலை 2 – தலைநகரில் ஜாலான் புடு மற்றும் ஜாலான் ஹங் துவா சாலை சந்திப்புகளில் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த சுரங்க சாலை இன்று காலை சரிந்தது.

சுமார் காலை 10.38 மற்றும் மதியம் 12.20 மணியளவில் இரண்டு முறை இந்த சரிவு ஏற்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் துணை இயக்குநர் அஸிஸான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த சுரங்கப்பாதை மேலும் சரியும் அபாயம் உள்ளதாக தாங்கள் கணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  எனினும் சியாபாஸ் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, இம்பி மற்றும் ஹங் துவா இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

படம்: EPA