Home இந்தியா சென்னை கட்டிட விபத்து: மோப்ப நாய்கள் 15 பேரை கண்டுபிடித்தன!

சென்னை கட்டிட விபத்து: மோப்ப நாய்கள் 15 பேரை கண்டுபிடித்தன!

608
0
SHARE
Ad

dogசென்னை, ஜூலை 2 – கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 15 பேரை தீயணைப்புத் துறையின் 5 மோப்ப நாய்கள் கண்டுபிடித்துள்ளன. மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் என 2 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

chennai building collapse,கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீயணைப்புத் துறையின் ஜூலி, ஓரி, ஜீனா, ஜாக், ஜான்சி ஆகிய 5 நாய்கள் ஈடுபட்டுள்ளன.

chennai building collapse dog,ஜூலி 2 பேரை உயிருடனும், ஓரி உயிருடன் 2 பேரையும் உயிரிழந்த ஒருவரையும், ஜீனா உயிருடன் 2 பேரையும் உயிரிழந்த 2 பேரையும், ஜாக் உயிருடன் 3 பேரையும், உயிரிழந்த ஒருவரையும், ஜான்சி உயிருடன் 2 பேரையும் கண்டுபிடித்துள்ளன.

#TamilSchoolmychoice

India-Building-Collapsஇது தொடர்பாக தீயணைப்பு வீரர் அனிஷ் கூறியதாவது, “உள்ளே யாராவது சிக்கி இருந்தால், எங்கள் நாய்கள் அந்த இடத்துக்கு சென்று குரைக்கும்.

Chennaibuilding1_1974114gயாராவது இறந்து இருந்தால், அந்த இடத்தில் சென்று நின்றுவிடும். பிறகு அந்த இடத்தையே சுற்றி வரும். மேலும், உள்ளே சென்று அங்கு படிந்துள்ள ரத்தத்தை நாக்கால் நக்கும். அதை வைத்து நாங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவோம் எனக் கூறினார்.