ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரான இவர், சம்பவம் நடந்த போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி மூன்று நாட்கள் பூமிக்கு அடியில் உணவு, தண்ணீர் எதுவும் இன்றி இருந்திருக்கிறார்.
இவரை பல கடின முயற்சிகளுக்குப் பிறகு மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது உயிர் பிழைத்துள்ள பிரகாஷ்குமார் பிரபல குமுதம் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,
“அன்றைக்கு சனிக்கிழமை. கூலி நாள் என்பதால் கீழ்த்தளத்துல நிறைய பேர் நின்னு பேசிக் கொண்டிருந்தாங்க. நான் உள்ளே வேலை செய்துக் கொண்டிருந்தேன். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.
“சிரமப்பட்டு சுவாசிச்சேன். காப்பாதுங்க! காப்பாத்துங்கனு கத்தினேன். பகல், இரவு எது என்று தெரியவில்லை. அன்று கடினமான வேலை என்பதால் களைப்பில் அப்படியே உறங்கிவிட்டேன்.
திடீரென நல்ல பசி எடுக்க முழிப்பு வந்தது. நாக்கு வறண்டு,தொண்டையெல்லாம் காய்ஞ்சு போச்சு. தாகம் வேறு. உயிர் பிழைப்போம் என்று நிச்சயமில்லை. அதனால், என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு என்னுடைய சிறுநீரையே குடிச்சேன்” என்று இன்னும் கண்களில் பயம் விலகாமல் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவர் தன்னை காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறியதோடு, கடவுளின் புண்ணியத்தால் மறுபிறவி எடுத்துள்ளதாகவும் மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.