லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 11- மிகவும் பிரபலமான, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்” எனும் சரித்திரக் கதை கொண்ட தொலைக்காட்சி தொடர் ப்ரைம்டைம் எம்மின் விருது விழாவில் முதலிடத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் தொலைக்காட்சி தொடர்களுக்கான ஆஸ்கார் விருதாகும்.
அரசு குடும்பத்தின் பகைக்களை சித்தரிக்கும் பயங்கரமான கற்பனை தொடரான, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, அவ்விருது விழாவில் சிறந்த தொடர் நாடகம் பிரிவு உட்பட 19 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த தொடர் நாடகங்களுக்கான பட்டியலில், ‘ப்ரேகிங் பேட்’, ‘மேட்மேன்’, ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’, ‘ட்ரூ டிடெக்டிவ்’ மற்றும் டவுன் டான்அபி ஆகிய தொடர்களுக்கு மத்தியில் கேம் ஆஃப் த்ரோன்ஸ்”, முன்னிலையில் உள்ளது.