Home வணிகம்/தொழில் நுட்பம் கென்யாவில் டியூன் ஹோட்டல் திறக்கப்படும்!

கென்யாவில் டியூன் ஹோட்டல் திறக்கப்படும்!

564
0
SHARE
Ad

tune-hotels-logo-on-red-backgroundகோலாலம்பூர், ஜூலை 5 – மலேசியாவில் தொடங்கப்பட்ட டியூன் ஹோட்டல் நிறுவனம், தற்போது உலகெங்கிலும் தங்கள் கிளைகளை திறந்து வருகின்றது.

மலேசியாவில் மலிவு விலை தங்கும் விடுதி பாணியிலும், முன்கூட்டியே பதிவு செய்தால் குறைந்த விலை கட்டணங்கள் என்றும் இயங்கி வரும் டியூன் ஹோட்டல் நிறுவனம், ஏர்ஆசியாவின் நிறுவனர் டோனி பெர்னாண்டசின் மற்றொரு வர்த்தக திட்டமாகும்.

தற்போது டியூன் ஹோட்டல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில் தொடங்கப்பட விருக்கிறது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் இந்த டியூன் ஹோட்டல் செயல்பட தொடங்கும். ஆப்பிரிக்கா கண்டத்திலேயே முதல் டியூன் ஹோட்டலாக இந்த ஹோட்டல் திகழும்.

ஆப்பிரிக்காவை தலைமையகமாக கொண்டு விளங்கும் ‘இம்பா’ முதலீட்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள டியூன் ஹோட்டல் நிறுவனம் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியில் மேலும் 15 டியூன் ஹோட்டல்களை அடுத்து வரும் ஆண்டுகளில் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்முதலாக திறக்கப்படவிருக்கும் நைரோபி டியூன் ஹோட்டலில் 280 அறைகள் கொண்ட தங்கும் விடுதியாக இருக்கும் என்பதோடு நைரோபியின் மத்திய வர்த்தக பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்.

ஏற்கெனவே மலேசியாவிற்கு வெளியே லண்டன் போன்ற நகர்களிலும் டியூன் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.