Home கலை உலகம் உலகின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் தீபிகா படுகோன் முதலிடம்!

உலகின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் தீபிகா படுகோன் முதலிடம்!

1741
0
SHARE
Ad

Deepika_Rமும்பை, ஜூலை 5 – உலகின் மிகவும் கவர்ச்சிகரமான 100 பெண்களின் பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தில் வெளியாகும் எப்ஹெச்எம் என்ற மாத இதழ் உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகின்றது.

இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

deepika padukoneமுதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து அவ்விதழின் புதிய பதிப்பில் தீபிகா இடம் பெற்றுள்ளார். தன்னைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 100 பெண்களின் பெயர்கள் வந்துள்ள புதிய பதிப்பினையும் நேற்று அவர் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

இது குறித்து திபிகா கூறுகையில், “இந்தத் தேர்விற்கு தன்னுடைய வெளித்தோற்றம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. தான் செய்த பணிகளும், தனக்குக் கிடைத்த வித்தியாசமான கதாபாத்திரங்களின் சிறப்புமே இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Deepika-Padukoneகடந்த வருடங்களில் அவர் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அவருடைய வேறுபட்ட நடிப்புத் திறமைகளைக் காண்பித்தவை. அதனால்தான் தீபிகா இந்த இடத்தைப் பெற்றுள்ளார்.

புறத்தோற்றம் மட்டுமே முக்கியமல்ல, திறமையும்தான் முக்கியம் என்பது இவ்வெற்றிக்கான காரணமாக கூறப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக பாலிவுட்டின் காத்ரீனா கைப் இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

deepika padukone,தீபிகா தற்போது “பைண்டிங் பான்னி” என்ற படத்தில் நடித்து வருகின்றார். ஹோமி அட்ஜானியா இயக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் கபூர், நஸ்ருதீன் ஷா, டிம்பிள் கபாடியா ஆகியோரும் தீபிகாவுடன் இணைந்து நடிக்கின்றனர்.