Home வணிகம்/தொழில் நுட்பம் சைம் டார்பி நிறுவனம் பிரிக்கப்படுகின்றது

சைம் டார்பி நிறுவனம் பிரிக்கப்படுகின்றது

516
0
SHARE
Ad

sime-darby-logoகோலாலம்பூர், ஜூலை 8 – நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக பங்குச் சந்தை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சைம் டார்பி நிறுவனம் தனது சொத்து மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக இரண்டு அல்லது மூன்று குழுமங்களாக பிரிக்கப்படும் என தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல தோட்டங்களை உடமையாகக் கொண்டிருக்கும் சைம் டார்பி நிறுவனம் இதன்மூலம் ஏறத்தாழ மூன்று பில்லியன் மலேசியன் ரிங்கிட் மதிப்பிற்கு அளவில் தனது சொத்துக்களின் மதிப்பை உயர்த்திக் கொள்ள முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தனது நில சொத்துடமைகளை கொண்ட நிறுவனத்தை மற்றொரு சொத்து நிர்வாக நிறுவனத்துடன் இணைப்பதன் மூலம் ஏறத்தாழ 1.4 பில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்புடைய சொத்துகளை வெளிக் கொணர முடியும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அதேபோன்று தனது வாகன தயாரிப்பு நிறுவனத்தையும் பங்குச்சந்தையில் பட்டியலிட சைம் டார்பி எண்ணம் கொண்டுள்ளது.

மிகப்பெரிய வர்த்தக குழுமமாக சைம் டார்பி உருவாகியுள்ளதால் மதிப்பு மிகுந்த பல சொத்துகள் அந்த குழுமத்தில் தற்போது இடம் பெற்றுள்ளன.

இந்தச் சொத்துகளின் மதிப்பை வெளிக் கொணர்வதற்கு சைம் டார்பி நிறுவனத்தை இரண்டு அல்லது மூன்று குழுமங்களாக பிரித்து லாபகரமாக இயங்கி வரும் சில நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் சைம் டார்பி நிறுவனம் தனது மதிப்பை மேலும் உயர்த்திக்கொள்ள முடியும். இந்தக் கண்ணோட்டத்தில் அந்நிறுவனம் தற்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இந்த வர்த்தக மாற்றங்களுக்கு பின்னர் சைம் டர்பி நிறுவனம் முழுக்க முழுக்க தோட்டங்கள் மற்றும் தோட்டப் புற வர்த்தகங்கள் சார்ந்த நிறுவனமாக மட்டும் செயல்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.