Home தொழில் நுட்பம் சாம்சுங்கின் ‘விர்ட்சுவல் ரியாலிட்டி’ கருவிகளின் படங்கள் வெளியீடு!

சாம்சுங்கின் ‘விர்ட்சுவல் ரியாலிட்டி’ கருவிகளின் படங்கள் வெளியீடு!

681
0
SHARE
Ad

samsung-will-launch-a-virtual-reality-gaming-headset-similar-to-oculus-rift-later-this-yearகோலாலம்பூர், ஜூலை 9 – சாம்சுங் நிறுவனம் உருவாக்கி வந்த மெய்நிகர் (Virtual Reality) கருவிகள் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் பிரபல இணையத்தளங்களில் வெளியாகி உள்ளன.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங் மெய்நிகர் கருவிகளை உருவாக்கி வருவதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகளால் ஆருடங்கள் பல கூறப்பட்டன. தற்போது சாம்சுங் நிறுவனத்தின் மெய்நிகர் கருவியான ‘கியர் விஆர்’  (Gear VR) பற்றிய படங்கள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கருவிகளை வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ‘ஐஎப்எ’ (IFA) தொடக்க விழாவில், கேலக்ஸி நோட் 4-ன் சேர்த்து அறிமுகம் செய்ய சாம்சுங் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மக்களின் அன்றாட வாழ்க்கை கற்பனைகளும், எதார்த்தங்களும் நிறைந்ததாக மாறி வருகின்றது. அவர்களின் கற்பனைகளை மேம்படுத்தும் வகையில் சாம்சுங் இந்த புதிய முயற்சியில் களம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

பயனர்கள் தங்கள் திறன்பேசிகளை இந்த கருவியில் பொருந்தச் செய்து, மெய்நிகர் பரிமாணத்தை உணரலாம் என்று கூறப்படுகின்றது.

மெய்நிகர் பற்றிய முழுமையான அனுபவங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என முதலில் பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்தது. அதன் முன்னோட்டமாக அந்நிறுவனம், மெய்நிகர் கருவிகளைத் தயாரிக்கும் அக்குலஸ் விஆர் (Oculus VR) நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.