கோலாலம்பூர், ஜூலை 9 – மலேசியாவின் பங்குச் சந்தை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மலேசியாவின் பங்கு வர்த்தகம் அதிவேகமாக முன்னேறி வருகின்றது. ஏறக்குறைய அதன் மதிப்பு 8 புள்ளிகளைத் தாண்டும் என்று கூறப்படுகின்றது.
கோலாலம்பூர் கூட்டுக் குறியீட்டு எண் (The Kuala Lumpur Composite Index) 1,890 புள்ளிகளுக்கு கூடுதலாக உள்ளதாகவும், எதிர்வரும் புதன்கிழமை முதல் முதலீட்டாளர்கள் தங்கள் நிகர இலாபங்களை பெற முடியும் என்றும் கூறப்படுகின்றது.
ஒட்டுமொத்தமாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளைவிட ஆசியாவின் கை ஓங்கி உள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்து அலுமினியம் தயாரிப்பாளர் அல்கோவஹ் கூறுகையில், “சந்தையின் இரண்டாம் கால்பகுதியில், யாரும் எதிர்பார்க்க வண்ணம் பங்குகள் இலாபத்தை ஈட்டின” என்று கூறியுள்ளார்.
கோலாலம்பூர் கூட்டுக் குறியீட்டு எண் செவ்வாய்கிழமை முடிவில் நிதி பங்குகள், தொழில்துறை மற்றும் தோட்ட பங்குகள் என அனைத்திலும் முன்னிலை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தையின் அன்றைய முடிவின் போது மலேசியாவின் பங்கு வர்த்தகம் 1,891.66- 1,896.23 புள்ளிகளுக்கு இடையில் இருந்தது.
மலேசியாவின் சேவை நிறுவனங்களான ‘மலாயன் வங்கி’ (Maybank), ‘பொது வங்கி’ (Public Bank) மற்றும் ‘மலேசியா ஏர்லைன்ஸ்’ (Malaysia Airlines) என அனைத்து நிறுவனங்களும் உயர்வை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.