கோலாலம்பூர் – மலேசியாவின் புள்ளிவிவர இலாகா வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி மொத்த வணிகமும், சில்லறை வணிகமும் சரிவைக் கண்டிருக்கின்றன.
ஏப்ரல் 2020 புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 36.6 விழுக்காடு சரிவை மொத்த,சில்லறை வணிகங்கள் சந்தித்திருக்கின்றன. இதன் மதிப்பு 45 பில்லியன் ரிங்கிட்டாக மதிப்பிடப்படுகிறது.
மலேசிய வரலாற்றில் இது மிகப் பெரிய சரிவாகும்.
இதே ஏப்ரல் 2020 காலகட்டத்தில் இணையவழி வணிகம் 28.9 விழுக்காடு உயர்வு கண்டது. கொவிட்-19 பாதிப்புகளின் நடமாட்டக் கட்டுப்பாட்டு காலகட்டமான இந்த காலகட்டத்தில் இணையம் வழி வணிகங்கள் விரிவடைந்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தினால் மொத்த வியாபாரமும், சில்லறை வணிகங்களும் குறைந்திருந்தாலும், எதிர்வரும் மாதங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தளர்வுகளினால் இந்த வணிகங்களின் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.