Home One Line P1 இணைய ஊடுருவல் தொடர்பாக 2-வது எச்சரிக்கை- காவல் துறை விசாரணை

இணைய ஊடுருவல் தொடர்பாக 2-வது எச்சரிக்கை- காவல் துறை விசாரணை

728
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இணையத் தாக்குதல் தொடர்பாக இரண்டாவது எச்சரிக்கையை வழங்கிய “அநேனிமஸ் மலேசியா”- க்கு எதிராக காவல் துறையினர் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இணையம் மற்றும் பல்லூடக குற்றவியல் புலனாய்வு பிரிவு இணைய ஊடுருவிகளின் அச்சுறுத்தல் குறித்து புகார்களைப் பெற்றுள்ளதாகவும், பொது தேசத்துரோகம் மற்றும் குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றங்களுக்காக விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் புக்கிட் அமான் வணிக குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ சைனுடின் யாகோப் தெரிவித்தார்.

“இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 505 மற்றும் 507 பிரிவுகளின் கீழ் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் (1998) பிரிவு 233 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில், ‘அநேனிமஸ் மலேசியா’ என்ற ஊடுருவி குழு சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொலி மூலம் அரசாங்க வலைத்தளங்களை தாக்குவதாக அச்சுறுத்தியது.

மலேசியாவின் பாதுகாப்பு அமைப்பு குறைந்த மட்டத்தில் உள்ளதாகவும், கசிந்த அனைத்து தகவல்களையும் ஊருடுவிகளிடம் விற்கக்கூடும் என்றும் குற்றம் சாட்டியது. 46 மில்லியனுக்கும் அதிகமான தொலைதொடர்பு பயனர்களின் தரவு இன்றுவரை தாக்கப்பட்டுள்ளது.

தரவு கசிவு காரணமாக 2015 முதல் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் “மோசடி செய்பவர்” தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாகக் கூறி அது இன்று மற்றொரு மூன்று நிமிட காணொலியை வெளியிட்டது.

கடந்த செவ்வாயன்று, தேசிய பாதுகாப்பு மன்றம், தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனம் (என்ஏசிஎஸ்ஏ) மூலம் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், இணையத் தாக்குதல் இருப்பதை நினைவூட்டி, தாக்கத்தைத் தடுக்கவும் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.