புதுடில்லி, ஜூலை 12- இந்தியாவின் தலைநகரான புதுடில்லி உலகின் 2வது பெரிய நகராக உருமாறியுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட ஜப்பானின் தலைநகர் டோக்கியோவை பின்னுக்கு தள்ளி தற்போது உலகின் இரண்டாவது பெரிய நகரமாக டில்லி மாறியுள்ளது.
1995-ம் ஆண்டில் இருந்ததை விட டில்லியின் தற்போதைய மக்கள் தொகை இரு மடங்கு அதிகரித்து விட்டதாகவும், தற்போது 25 மில்லியன் மக்கள் டில்லியில் வசித்து வருவதாகவும் உலகின் நகரமயமாக்கம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள இவ்வாண்டுக்கான அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
முதல் இடத்தில் உள்ள நகராக ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ திகழ்கின்றது.
அங்கு தற்போது 38 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
உலகின் மற்ற மிகப் பெரிய நகர்களான சீனாவின் ஷங்காய், தென் அமெரிக்காவின் மெக்சிக்கோ, மும்பை ஆகிய பெருநகரங்களில் தலா 21 மில்லியன் மக்கள் வாழ்வதாக குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, 2050-ம் ஆண்டு வாக்கில் சீனாவை பின்னுக்கு தள்ளி, 40 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என்றும் அந்த ஜநா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.