Home தொழில் நுட்பம் ஐபோன்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சீன அரசு செய்தி நிறுவனம் அறிவிப்பு!

ஐபோன்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சீன அரசு செய்தி நிறுவனம் அறிவிப்பு!

516
0
SHARE
Ad

apple-iphone-4-91பெய்ஜிங், ஜூலை 12 – சீன அரசின் செய்தி நிறுவனம், ஆப்பிளின் தயாரிப்புகளான ஐபோன்களை, அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் கருவியாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் மத்திய தொலைக்காட்சி நிறுவனமான சிசிடிவி‘(CCTV) நேற்று ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின், ஐபோன்களை சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் கருவியாக அறிவித்துள்ளது.

ஆப்பிளின் ஐபோன்களில் உள்ள ‘Frequent Locations’ எனும் வசதியின் மூலம் பயனர்களின் இருப்பிடங்களை அவர்களின் விருப்பத்துடன் அறிய முடியும் என்பதால், பயனர்களுக்கு மட்டும் அல்லாது அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை பற்றிய பல முக்கிய விவரங்களை அந்நிய நாடுகளின் உளவு அமைப்புகள் எளிதாக அறிந்து கொள்ள முடியும் என்பது போன்ற தகவல்களை ஒளிபரப்பி உள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் அந்த தொலைக்காட்சி நிறுவனம், சீனப் பயனர்கள் பயன்படுத்தும் ஆப்பிள் ஐபோன்களைக் கொண்டு அமெரிக்க உளவு அமைப்பு சீனாவை கண்காணிக்கின்றது என்றும் கூறியுள்ளது.

சீனாவின் இத்தகைய விமர்சனங்களை ஏறக்குறைய அனைத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் சந்தித்து உள்ளன. குறிப்பாக கூகுளின் மேப் மற்றும் ஜிமெயில் போன்ற சேவைகள், மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 8 இயங்குதளங்கள், ஐபிஎம் நிறுவனத்தின் சர்வர்கள் போன்றவைகளும் சீனாவின் சந்தேகப் பார்வையில் சிக்கி உள்ளன.

இத்தகைய நெருக்கடிகள் இருந்தும் உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் 25 சதவீதம் விற்பனை சீனாவில் தான் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.