ஜோகூர் பாரு, ஜூலை 15 – ஜோகூர் தஞ்சோங் பியாய் கடற்பகுதியில் 80 கள்ளக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு, மலேசிய கடற்படை (Maritime Enforcement Agency – MMEA) படகுடன் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் கள்ளக் குடியேறிகளின் படகு நீரில் கவிழ்ந்ததில் 19 பேரைக் காணவில்லை. இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
கள்ளக்குடியேறிகளைக் ஏற்றிக் கொண்டு சென்ற அந்த படகு ஜோகூர் வழியாக இந்தோனேசியாவிற்கு செல்ல முயன்றதாக நம்பப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவத்தில் நீரில் தத்தளித்த 61 பேரை மலேசிய மீட்புப் படையினர் மீட்டு, ஜோகூர் சுல்தான் அமீனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.
கள்ளக் குடியேறிகளை தடுக்கும் நடவடிக்கையில் மலேசிய கடற்படை மிகத் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.