Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் சிறந்த விமான போக்குவரத்து நிறுவனமாக கேத்தே பசுபிக் ஏர்வேஸ் தேர்வு!

உலகின் சிறந்த விமான போக்குவரத்து நிறுவனமாக கேத்தே பசுபிக் ஏர்வேஸ் தேர்வு!

673
0
SHARE
Ad

 

cathay

ஃபார்ன்பரோ, ஜூலை 16 – உலகின் சிறந்த விமான போக்குவரத்து சேவை புரியும் நிறுவனமாக  ‘கேத்தே பசுபிக் ஏர்வேஸ்’ (Cathay Pacific Airways) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று இங்கிலாந்தின் ஃபார்ன்பரோ நகரில் நடந்த விமானங்களுக்கான கண்காட்சி மற்றும் ‘ஸ்கைட்ராக்ஸ்’ (Skytrax) -ன் விருது வழங்கும் விழாவில் கேத்தே பசுபிக் நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கேத்தே பசுபிக் விமான நிறுவனம் பல்வேறு தர நிபந்தனைகளைக் கடந்து, வாடிக்கையாளர்களின் நேரடி வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேத்தே நிறுவனத்திற்கான இந்த வெற்றி பற்றி அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஸ்லோசர் கூறுகையில், “கேத்தே பசுபிக் அணியின் சிறந்த உழைப்பிற்கான பரிசு இதுவாகும். சிறந்த நிறுவனத்தை, பயணர்களும் அதே கண்ணோட்டத்துடன் பத்து இருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு கேத்தே ஏர்வேஸ் முதல்முறையாக இத்தகைய சிறப்பினைப் பெறுகின்றது. இந்த வரிசையில் ‘கத்தார் ஏர்வேஸ்’ (Qatar Airways) மற்றும் ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ (Singapore Airlines) முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெறுகின்றன.