Home கலை உலகம் முத்தமிட்டு ராசியான மகேஷ் பாபு, சமந்தா!

முத்தமிட்டு ராசியான மகேஷ் பாபு, சமந்தா!

663
0
SHARE
Ad

mahesh-babu-samanthaசென்னை, ஜூலை 16 – “நே ஒக்கடினே” என்ற தெலுங்கு பட சுவரொட்டியை பார்த்து தவறான கருத்து கூறி மகேஷ் பாபுவின் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சமந்தா, பிலிம்ஃபேர் விருது விழாவில் மகேஷுடன் சமரசமாகியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, மகேஷ் பாபுவுடன் சேர்ந்து 2 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மகேஷின் நடிப்பில் வெளியான “நே ஒக்கடினே” படத்தின் சுவரொட்டியை பார்த்த சமந்தா வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஒரு “கமெண்ட்” அடித்து சர்ச்சையில் சிக்கினார்.

இது என்ன சுவரொட்டியில் மகேஷ் பாபுவின் பின்னால் கதாநாயகி நாய் போன்று நான்கு கால்களில் செல்கிறார் என்று சமந்தா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சமந்தாவின் கருத்தை கேட்ட மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்துவிட்டனர். ‘அஞ்சான்” பட சுவரொட்டியில் சூர்யா சமந்தாவின் காலை பிடித்திருப்பதை பார்த்த மகேஷ் பாபு ரசிகர்கள் இது மட்டும் என்னவாம் என்று கேட்டனர்.

Samantha-patchup-with-Mahesh-Babuஇந்த பிரச்சனையால் மகேஷ் பாபுவும், சமந்தாவும் முகம் கொடுத்து பேசிக் கொள்வது இல்லை என்று கூறப்பட்டது. சென்னையில் நடந்த பிலிம்ஃபேர் விருது விழாவுக்கு மகேஷ் பாபு வந்திருந்தார், சமந்தாவும் வந்திருந்தார்.

மகேஷ் பாபுவை பார்த்த சமந்தா அவர் இருக்கைக்கு அருகில் சென்று பேசினார். இருவரும் கன்னத்தில் முத்தமிட்டு ராசியாகிவிட்டனர். விழாவில் சிறிது நேரம் மகேஷ் பாபு அருகில் சமந்தா அமர்ந்திருந்தார். இதன் மூலம் நாங்கள் ராசியாகிவிட்டோம் என்று ரசிகர்களுக்கு சொல்கிறார் போல சமந்தா.