லண்டன், ஜூலை 16 – இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அமைச்சரவையில் மேலும் பல அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வர பிரதமர் டேவிட் கேமரூன் திட்டமிட்டுள்ளாதாக கூறப்படுகின்றது.
இங்கிலாந்தில் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி கடந்த 4 ஆண்டுகளாக அங்கு வருகின்றது. பொருளாதரத்தில் கடும் சரிவுகளை சந்தித்து வருவதால ஆளும் அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக, தனது அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய டேவிட் கேமரூன் முடிவு செய்துள்ளதாக கோரப்படுகின்றது.
இதற்காக அவர் முக்கிய அமைச்சர்களை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகின்றது. இதன் காரணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் பதவி விலகி உள்ளதை அடுத்து மேலும், 12 அமைச்சர்கள் தங்கள் பதவி இராஜினாமா செய்வார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் கூறுகையில், “தற்போதைய இராணுவ அமைச்சர் ஃபிலிப் ஹேமண்ட், புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார் என எதிரபார்க்கப்படுகின்றது” என்று தகவல் தெரிவித்துள்ளார்.