Home இந்தியா இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒருங்கிணைந்த தனி வங்கி!

இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளுக்கு ஒருங்கிணைந்த தனி வங்கி!

389
0
SHARE
Ad
6th Summit of the BRICS

போர்ட்டலேசா, ஜூலை 17 – இந்தியாவின் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைந்த வங்கி ஒன்றை உருவாக்க அந்நாடுகளின் தலைவர்களால் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ (BRICS) மாநாடு, நேற்று முன்தினம் பிரேசிலில் துவங்கியது. அம்மாநாட்டில் இந்தியாவின் சார்பாக முதல் முறையாக பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் நாடுகளின் முதலீடுகளைக் கொண்டு ஒருங்கிணைந்த தனி மூலதன பொது வங்கி ஒன்றை உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஏற்கனவே, இந்த அமைப்பில் உள்ள இதர நாடுகளுக்கும் இதே எண்ணம் இருந்து வந்த நிலையில், சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆரம்ப முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்றும், இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவும், முதல் ஆளுநர்கள் குழுவில் ரஷ்யாவும் இடம் பெறுகிறது என்று கூறப்படுகின்றது.