Home இந்தியா ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் மோடி சந்திப்பு!

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் மோடி சந்திப்பு!

591
0
SHARE
Ad

narendra-modi2பிராங்க்பர்ட், ஜூலை 18 – ஜெர்மனி, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நட்பு நாடு. இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மோடி பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பும் வழியில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நேற்று தங்கினார். அப்போது, ஜெர்மனி அதிபருடன் தொலைபேசி மூலம் பேசினார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வென்றதற்கு தனது பாராட்டுகளை தெரிவித்த மோடி, மெர்கலின் 60-வது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

ஜெர்மனி, இந்தியாவின் மதிப்புள்ள நட்பு நாடாகும். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த மெர்கலுடன் இணைந்து பணியாற்றிட தயாராக உள்ளேன்“ என்று தனது டுவிட்டர் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்தியா-ஜெர்மனி கலந்தாய்வு கூட்டத்துக்கு வரும்படி அவருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அடுத்த ஆண்டு ஹானோவரில் நடைபெறும் வர்த்தகக் கண்காட்சிக்கு வரும்படி மோடிக்கு மெர்கல் அழைப்பு விடுத்தார்.

modiஇச்சந்திப்பிற்கு முன்னதாக, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில், தென் ஆப்ரிக்க அதிபர் ஜேகப் ஜூமாவை சந்தித்துப் பேசினார் மோடி. இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உறுப்பினர்களாக உள்ள ஐ.பி.எஸ்.ஏ.யின் மாநாட்டை அடுத்த ஆண்டு புதுடெல்லியில் நடத்துவது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.

மேலும் இந்தியா, ஆப்ரிக்கா அமைப்பின் (ஐஏஎப்) கூட்டத்தை வரும் டிசம்பரில் புதுடெல்லியில் நடத்துவது என்றும் இந்த சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டது.இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசினார்கள்.

தென் ஆப்ரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி, இந்தியா வந்ததன் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. அதற்கு வரும்படி ஜூமாவுக்கு அழைப்பு விடுத்தார் மோடி.