Home உலகம் உக்ரைனில் உள்நாட்டுப் போரினைக் கைவிட ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு!

உக்ரைனில் உள்நாட்டுப் போரினைக் கைவிட ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு!

828
0
SHARE
Ad

li-russia-putin-620-2898463மாஸ்கோ, ஜூலை 19 – கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவாளர்களுக்கும், உக்ரைன் அரசுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையை இரு தரப்பினரும் நிறுத்திக்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் எம்ஹெச் 17 விமானம், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது, உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளையும், ரஷ்யா மீது கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தில் 298 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது, உலக நாடுகளை சமாதானப்படுத்தும் நோக்குடன் ரஷ்யா அதிபர் புதின் இத்தகைய அழைப்பை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாஸ்கோவில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

putin“உக்ரைனில் இரு தரப்பினரும் வெகு விரைவில் போரினை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை எட்ட முயற்சிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ரஷ்ய ஆதரவு போராளிகளுக்கான ஆயுதங்களை ரஷ்யா அளித்து வருவதாகவும், விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில், பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.