Home கலை உலகம் நடிகர் ‘காதல்’ தண்டபாணி காலமானார்!

நடிகர் ‘காதல்’ தண்டபாணி காலமானார்!

380
0
SHARE
Ad

tamil-cinema-meenakshi-kathalan-elangovan-movie-gallery03சென்னை, ஜூலை 20 – ‘காதல்’ படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகி, அதன் பின்னர் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்த நடிகர் தண்டபாணி இன்று மாரடைப்பால் காலமானார்.

சென்னையில் வசித்து வந்த தண்டபாணிக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. 

தண்டபாணி இங்கிலீஸ்காரன், முனி, சித்திரம் பேசுதடி, மலைக்கோட்டை, கச்சேரி ஆரம்பம், குட்டி பிசாசு, மாப்பிள்ளை, தில்லாலங்கடி, வேலாயுதம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 மலேசியப் படமான ‘ஓப்ஸ் கோச டப்பா 3’ என்ற படத்திலும் தண்டபாணி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.