Home நாடு எம்எச்17 பேரிடர்: பேரதிர்ச்சியில் பயணிகள் உடனடி மரணம் அடைந்திருப்பார்கள் – நிபுணர் கருத்து

எம்எச்17 பேரிடர்: பேரதிர்ச்சியில் பயணிகள் உடனடி மரணம் அடைந்திருப்பார்கள் – நிபுணர் கருத்து

461
0
SHARE
Ad

Malaysia Airlines Ukraine Crash Slideshow 03கோலாலம்பூர், ஜூலை 20 – ஏவுகணை வந்து தாக்கி எம்எச்17 விமானம் வெடித்த போது, பேரதிர்ச்சியிலும், அதிக அளவிலான அழுத்தத்திலும் பயணிகள் அனைவரும் உடனடியாக இறந்திருக்கலாம் அல்லது சுயநினைவு இன்றி போயிருக்கலாம் என்று விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க் அருகே கடந்த 1996 -ம் ஆண்டு டிடபிள்யூஏ 800 விமானம் வெடித்து சிதறிய சம்பவத்தை ஆராய்ச்சி செய்தவரான ஜேம்ஸ் வோஸ்வின்கெல் என்ற அதிர்ச்சி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகையில், நடுவானில் விமானம் வெடித்து சிதறும் போது பயணிகளுக்கு பேரதிர்ச்சி மூன்று வழிகளில் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று வெடிக்கும் போது ஏற்படும் அதிக அளவிலான விசை, இரண்டு விமானம் மணிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் போகும் போது உடனடியாக அதன் வேகம் குறைதல் மற்றும் விமானம் கீழே விழுவது போன்ற மூன்று காரணங்களால் பயணிகளுக்கு இந்த பேரதிர்ச்சி ஏற்படும் என நியூயார்க்கின் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தலைமை அதிர்ச்சி மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரான வோஸ்வின்கெல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், விமானத்தில் ஏற்படும் அதிக அழுத்தத்தால், 33,000 அடி உயரத்தில் பயணிகளுக்கு நினைவு தப்பி உடனடியாக மரணத்தை அடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

“பயணிகளுக்கு அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. விமானம் அவ்வளவு உயரத்தில் இருந்து விழுவதும் தெரியாது” என்று வோஸ்வின்கெல் கூறியுள்ளார்.

நியூயார்க் அருகே லாங் தீவில் கடந்த 1996 -ம் ஆண்டு டிடபிள்யூஏ 800 விமானம் வெடித்து சிதறிய போது அதிலிருந்த 230 பயணிகளும் உடனடி மரணத்தைத் தழுவினர்.

“கடலில் விழுந்த பயணிகளின் உடலில் செய்யப்பட்ட பரிசோதனையில், அவர்களது நுரையீரலில் தண்ணீர் போகவில்லை.காரணம் பயணிகள் கடலில் விழும்போது அவர்கள் அனைவரின் மூச்சும் ஏற்கனவே நின்றிருக்க வேண்டும்” என்றும் வோஸ்வின்கெல் மேற்கோள்காட்டியுள்ளார்.