உக்ரேன், ஜூலை 20 – கிழக்கு உக்ரேன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 மாஸ் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் இடம், பிரிவினை கோரும் போராளிக் குழுக்களும், உக்ரேன் அரசாங்கத் துருப்புகளும் கடுமையாக மோதலில் ஈடுப்பட்டிருக்கும் பிரதேசமாகும்.
அந்த இடத்தில் எடுக்கப்பட்ட நெஞ்சை உருக்கும் சில படக் காட்சிகளை இங்கே காணலாம் : –
விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தில் சிதறிக் கிடக்கும் ஒரு பயணியின் துண்டிக்கப்பட்ட கை. அதன்மீது ஒரு வெட்டுக் கிளி ஊர்ந்து செல்லும் காட்சி.
விமானம் விழுந்த இடத்திலிருந்து ஒரு பயணியின் சடலத்தை பணியாளர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.
மாஸ் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட பொருள் ஒன்று விமானம் விழுந்து கிடக்கும் இடத்தில் சிதறிக் கிடக்கின்றது.
விமானத்தின் பாகங்கள் கிடக்கும் இடத்தில் துப்பாக்கியோடு காவல் நிற்கும் பிரிவினைவாதப் போராளிகளில் ஒருவர்.
பரந்து விரிந்து கிடக்கும் சிதறல்களில் பயணியின் சடலத்தை அடையாளம் காட்டும் விதமாக தற்காலிகத் துணையால் போர்த்தப்பட்டுக் கிடக்கும் காட்சி.
படங்கள் : EPA