Home வாழ் நலம் நோயின்றி வாழ வாழை இலை!

நோயின்றி வாழ வாழை இலை!

1848
0
SHARE
Ad

South Indian mealsஜூலை 21 – தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு.சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை  இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழக்கம்.

இதை தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள்.  தலைவாழை என்றதும் நம்அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்துதான். அது சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும்  வாழஇலையில்தான் நிச்சயம் இருக்கும்.

இன்றைய அசுர வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது. அதுவும் நகர்ப்புறங்களில் தட்டு அல்லது பாலிதீன் பேப்பரில் தான் அங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது.

#TamilSchoolmychoice

cover4இது கால மாற்றத்தினால்  ஏற்பட்ட மாற்றம். நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்துக்கு விடுமுறை  நாட்களில் செல்லும்போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர்.

அதை மாற்ற முயற்சிக்கலாம். வாழை இலையில் சாப்பிடும்போது  ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் வாழஇலையில் சாப்பிட்டார்கள் என்பது நமக்கு தெரியவரும்.

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்:

சூடான உணவுகளை வாழை இலையில் வைத்து பரிமாறும்போது அதில் ஒருவித மணம்தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை  உண்டு. இதனால்தான் நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு வாழை இலையினை தேர்ந்தெடுத்தனர்.

onam-sadya-onamவாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு  வந்தால், தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம். வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும்  தணியும்.

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும்.  உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழை இலையின் மேல் உள்ள பச்சை தன்மை(குளோரோபில்) உணவை எளிதில் ஜீரணமடைய செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை  கொண்டது.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்து செல்ல வாழை இலை  சிறந்தது. வாழை இலையில் சாப்பாடு பார்சல்செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும்.

banana-leafதீக்காயம் ஏற்பட்டவர்களை வாழைஇலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்போதுதான் சூட்டின் தாக்கம் குறையும். பச்சிளம் குழந்தைகளை  உடலுக்கு நல்லெண்ணைய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின்  டியையும், இலையில் இருந்து பெறப்படும் குளுமையையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

சின்ன அம்மை, படுக்கை புண்ணுக்கு வாழைஇலையில் தேன்தடவி தினமும் சிலமணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். சோரியாசிஸ்,  தோல் சுழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைத்தால் குணமாகும்.

இதுபோன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் வாழை  இலைக்கு உண்டு. எனவே வாழ்க்கையில் நோயின்றி வாழ வாழைஇலையை பயன்படுத்துங்கள்.