Home வணிகம்/தொழில் நுட்பம் வர்த்தக முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் நாடு அமெரிக்கா – அதிபர் ஒபாமா சுய பிரச்சாரம்!

வர்த்தக முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் நாடு அமெரிக்கா – அதிபர் ஒபாமா சுய பிரச்சாரம்!

441
0
SHARE
Ad

obama,கலிபோர்னியா, ஜூலை 27 – வர்த்தக முதலீட்டாளர்கள் விரும்பும் நாடாக அமெரிக்கா உள்ளது என அந்நாட்டு அதிபர் ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா மாநிலத்தில்  நடைபெற்ற ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் இது குறித்து அவர் கூறியதாவது:-

“அமெரிக்க அதிபராக நான் பதவி ஏற்ற போது, வர்த்தக முதலீடுகளுக்கும், தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற நாடாக சீனா விளங்கியது. ஆனால் தற்போது அந்த இடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது.”

#TamilSchoolmychoice

“உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது அது அமெரிக்காவையும் பாதித்தது. எனினும் அந்நிலையில் இருந்து அமெரிக்கா வேகமாக முன்னேறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அரசு எடுத்த துரித நடவடிக்கைகள் ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.”

“எரி சக்தி உற்பத்தியை இரு மடங்காகவும், காற்றாலை மின்னுற்பத்தி மூன்று மடங்காகவும் அதிகரிக்க எனது அரசு எடுத்த முயற்சிகள் நல்ல பலனை தந்துள்ளன. கார்பன் மூலம் ஏற்படும் மாசு பாட்டையும் குறைத்துள்ளோம். தொழில்வளம் மிக்க நாட்டில் கார்பன் மாசுபாட்டை குறைப்பது மிகப்பெரிய சாதனை” என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், ஒபாமா கூறியுள்ள அனைத்து துறைகளிலும் அமெரிக்கா, அந்நாட்டு மக்களிடையே கடும் விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.