Home உலகம் சீனாவின் கட்டிடங்களால் விமானங்களுக்கு பாதிப்பு!

சீனாவின் கட்டிடங்களால் விமானங்களுக்கு பாதிப்பு!

559
0
SHARE
Ad

China Tall Buildings 500 x 300

பெய்ஜிங், ஜூலை 27 – சீனாவில் கட்டப்படும் வானுயர்ந்த அடுக்கு மாடி கட்டிடங்களினால், உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

நகரமயமாதல் என்ற பெயரில் சீனா, கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வானுயர் கட்டிடங்களைக் கட்டி வருகின்றது. இதனால் சுமார் 100 விமான விபத்துக்கள் இதுவரை நடந்துள்ளன.

#TamilSchoolmychoice

விபத்து காரணமாக சீனா இராணுவம் தனது விமான தளங்களை பல்வேறு பகுதிகளுக்கு மாற்றியும், சில விமான தளங்களை மூடியும் வருகின்றது. இது வரை 10-க்கும் மேற்பட்ட விமான தளங்கள் மூடப்பட்டு விட்டன.

அங்குள்ள நகரங்களில் கட்டுமான துறை நல்ல வர்த்தகத்தை தருவதால் 1000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி அதிக உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளன. அதன் காரணமாக, விமான ஓடுபாதையில் இருந்து எழுந்து மேலே பறந்து செல்வதிலும், கீழே இறங்குவதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீன இராணுவத்தின் விமான படை அதிகாரிகள் அவ்வபோது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெருகி வரும் விமான விபத்துகளை தடுக்க உலகளாவிய சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பலப்படுத்தவும் உலக நாடுகள் துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. வர்த்தகம், பொருளாதாரம் உட்பட ஒரு நாட்டின் வளர்ச்சிக் காரணிகளில் விமான போக்குவரத்தும் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.