Home கலை உலகம் அதி தீவிர ‘ஐ’ முயற்சி!

அதி தீவிர ‘ஐ’ முயற்சி!

575
0
SHARE
Ad

vikramசென்னை. பிப்.21- தாண்டவம், டேவிட் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தால் இப்போது விக்ரம் முழுவதும் நம்பி இருப்பது ‘ஐ’ படத்தை தான்.

அந்நியன் படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் – விக்ரம் இணைந்து இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது ‘ஐ’. விக்ரமுடன் எமி ஜாக்சன், சந்தானம், பவர் ஸ்டார், சுரேஷ் கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ‘அந்நியன்’ படத்தினை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தினையும் தயாரித்து வருகிறது.

#TamilSchoolmychoice

இப்படம்  குறித்து விக்ரம்,’ஐ’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் தோன்ற இருக்கிறேன். என்னை பொருத்த வரையில் ‘ஐ’ வாழ்வா, சாவா முயற்சி தான்.

ஒரே படத்தில் ஒல்லியாகவும், குண்டாகவும் நடிக்க இருக்கிறேன். எனது உடலமைப்பை முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறேன். கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்கும் போது, ‘அந்நியன்’ படத்தை விட 10 மடங்கு பெரிதாக ‘ஐ’ படம் இருக்கும்.

பெரிய பட்ஜெட் படம் என்பதால் இந்தியிலும் வெளிவரும். ‘ஐ’ படத்தில் நான் எடுத்து இருக்கும் முயற்சி வேறு எந்த ஒரு நடிகராவது எடுப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அவ்வளவு கஷ்டமான வேடத்தில் நடித்து இருக்கிறேன்.

ஐ படத்திற்காக மிகவும் உடம்பை குறைத்து இருப்பதால் எனது குழந்தைகள் ‘அப்பா.. உங்களுக்கு என்ன ஆச்சு? என்று கேட்கிறார்கள். எனது உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக இருந்து வருகிறேன். ‘” என்று கூறி இருக்கிறார்.