பாலில் உள்ள சத்துக்கள்:
* பால் மற்றும் பால்பொருட்கள் குறைந்த ஆற்றல் வழங்குபவை. ஒரு டம்ளர் பாலில் 80 முதல் 120 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. எனவே உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புபவர்களும், குண்டு உடலை குறைக்க விரும்புபவர்களும் பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்க்கலாம்.
* 250 கிராம் எடை கொண்ட ஒரு குவலை பாலில் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 478 கிராம் வைட்டமின்-ஏ, 32 சதவீதம் வைட்டமின்-டி காணப்படுகிறது.
மேலும் வைட்டமின்-கே, பி-குழும வைட்டமின்களான தயாமின், ரிபோபிளேவின், நியாசின், வைட்டமின் பி-6, வைட்டமின் பி-12 ஆகியவையும் குறைந்த அளவில் உள்ளன.
* உடலுக்கு வலுச்சேர்க்கும் அத்தியாவசிய தாதுஉப்புகளான கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு போன்றவை சராசரியாக காணப்படுகிறது.
* பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரதப்பொருட்கள் மிகுந்துள்ளன. இவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு உதவும்.
* பாலில் உள்ள கால்சியமும், பாஸ்பரசும் பற்களுக்கு நன்மை பயக்கும். இதிலுள்ள கேசின் என்ற பொருள் பற்களை பாதுகாக்கும்.
* பால் உணவுகளை, பழங்களுடன் குறைந்த உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் வெகுவாக குறையும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.