Home உலகம் தெற்கு சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 150 பேர் பலி!

தெற்கு சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 150 பேர் பலி!

455
0
SHARE
Ad
china4

யுனான், ஆகஸ்ட் 3 – சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜாவோடாங் நகரில் இன்று மாலை 4.30 மணி அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 150 பேர் பலியாகி உள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ள, இந்த நில அதிர்வில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக சீனா அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

china1

 (நிலநடுக்கத்தினால் சேதமடைந்த கட்டிடம் பாதிப்பின் கோரத்தை எதிரொலிக்கின்றது)