Home இந்தியா பரபரப்பான சூழ்நிநிலையில் கூடுகிறது நாடாளுமன்ற கூட்டம்

பரபரப்பான சூழ்நிநிலையில் கூடுகிறது நாடாளுமன்ற கூட்டம்

645
0
SHARE
Ad

indiaபுதுடில்லி, பிப்.21- பரபரப்பான சூழ்நிலையில் ரயில்வே வரவு செலவு  தாக்கல் மற்றும் பொது வரவு செலவுகளை நிறைவேற்றுவதற்கான நாடாளுமன்ற கூட்டம் இன்று துவங்குகிறது.

இதனை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார் சபாநாயகர் மீரா குமார்.

வரும் 2014-ம் ஆண்டில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற இருப்பதால் இன்று  துவங்கும் வரவு செலவு  கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

மூன்று மாதம் தொடர்ந்து நீண்ட நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது முதல் உரையுடன் கூட்டத்தொடரை துவக்‌கி வைக்க உள்ளார்.

இ‌தனையடுத்து வரும் 26-ம் தேதி ரயில்வே வரவு செலவும்  அதனைதொடர்ந்து வரும் 28-ம் தேதி பொது வரவு செலவும் தாக்கல் செய்யப்படுகிறது.