Home வணிகம்/தொழில் நுட்பம் பிலிப்பைன்ஸின் கிளார்க் விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவை மீண்டும் தொடக்கம் – ஏர் ஆசியா அறிவிப்பு!

பிலிப்பைன்ஸின் கிளார்க் விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவை மீண்டும் தொடக்கம் – ஏர் ஆசியா அறிவிப்பு!

596
0
SHARE
Ad

air-asia-airplane-Mகோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – ஏர் ஆசியா நிறுவனம் கோலாலம்பூருக்கும், பிலிப்பைன்ஸின் கிளார்க் விமான நிலையத்திற்கும் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்தை தொடங்க முடிவு செய்துள்ளது.

கடந்த 11 மாத காலமாக,  கோலாலம்பூருக்கும், பிலிப்பைன்ஸின் கிளார்க் விமான நிலையத்திற்கும் இடையே தடை செய்து இருந்து விமான போக்குவரத்தினை எதிர்வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் மனில, செபு மற்றும் கலிபோவைத் தொடர்ந்து ஏர் ஆசியாவின் நான்காவது வழித்தடமாக கிளார்க் மீண்டும் செயல்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கிளார்க் விமான நிலையத்திற்கு ஏர் ஆசியாவின் ‘எகே’ (AK) குறியீடு கொண்ட விமானங்கள், வாரத்தின் திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மற்றும் கிளார்க் இடையே பாதை மறுசீரமைப்பிற்காக விமான போக்குவரத்து, கடந்த வருடம் அக்டோபர் 31-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.