Home உலகம் பாகிஸ்தான் பற்றிய மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்! 

பாகிஸ்தான் பற்றிய மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்! 

452
0
SHARE
Ad

pakistan-flag-mapஇஸ்லமாபாத், ஆகஸ்ட் 14 – பாகிஸ்தான் குறித்து இந்தியப் பிரதமர் மோடியின் கருத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை எதிர்கொள்ளும் தைரியம் பாகிஸ்தானுக்கு இல்லாததால் தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரித்து வருகின்றது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மோடியின் கருத்து அடிப்படை ஆதாரமாற்றது என்றும் கூறியுள்ளது.

இது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் டஸ்னிம் அஸ்லாம் கூறியுள்ளதாவது:- “இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்னைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டுமே தவிர, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கக் கூடாது”

#TamilSchoolmychoice

“இந்தியாவுடன் நல்லுறவைப் பாதுகாக்க பாகிஸ்தான் அரசியல் மற்றும் அதிகாராம் உட்பட அனைத்து ரீதியாகவும் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, இரு நாட்டு உறவில் சிறந்த துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இரு நாடுகளின் உறவுக்கு சிக்கல் எழுந்துள்ளது வருந்தத்தக்கது” என்று கூறியுள்ளார்.