Home இந்தியா மகன்களின் குற்றச்செயல்களுக்கு பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும் – சுதந்திர தின மோடி உரை!

மகன்களின் குற்றச்செயல்களுக்கு பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும் – சுதந்திர தின மோடி உரை!

512
0
SHARE
Ad

modi,டெல்லி, ஆகஸ்ட் 15 – தலைநகர் டெல்லியில் நாட்டின் 68-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதன்முதலாக தேசியக் கொடியேற்றினார்.

முப்படை அணிவகுப்புடன் டெல்லியில் சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றம் மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாக கூறினார். செங்கோட்டையில் நின்று தாம் பிரதமராக பேசவில்லை என்றும் ஒரு சேவகனாக பேசுவதாகவும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல பாடுபடுவேன் என்றும் உறுதி தெரிவித்தார். அரசியல்வாதிகளால் நாட்டை மேம்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட மோடி மக்களால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று கூறினார்.

india-independence-dayஇந்நன்னாளில் ஏழைகளை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உறுதி ஏற்போம் என்று அழைப்புவிடுத்தார்.   நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட முன்னாள் பிரதமர்களுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

முந்தைய அனைத்து அரசுகளுமே நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். அரசியல் செய்வதை தவிர்த்து நாட்டை மேம்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்றும் மோடி அழைப்பு விடுத்தார்.

ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாடு மேலும் வளர்ச்சி காண முடியும் என்றும் தெரிவித்தார். வலிமையான இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்று தனது உரையில் மோடி வலியுறுத்தினார்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் செயல்பாடுகளாலும் நாடு மேம்பாடு காணும் என்று கூறினார்.  அன்னியன் என்ற முறையில் டெல்லிக்கு வந்த போது ஆச்சரியம் அடைந்ததாகவும், அரசுத் துறைகளுக்கு இடையேயான மோதல் தமக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும் குறிப்பட்டார்.

Untitled-1-10எந்த வகையான வன்முறையும், யாருக்கும் பயன் அளிக்காது. குற்றப்பாதையை தேர்ந்தெடுத்தோர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வன்முறை பாதையை கைவிட்டு நல்லிணக்க பாதைக்கு திரும்ப வேண்டும்.

மகன்களின் குற்றச்செயல்களுக்கு பெற்றோர் பொறுப்பேற்க வேண்டும். அடிக்கடி பலாத்கார சம்பவங்களால் நாட்டுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், நாட்டில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 940 பெண் குழந்தைகள் தான் பிறக்கின்றன.

பேராசைக்காக பெண் குழந்தைகளை பலி கொடுக்காதீர்கள் என்றும் நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். நமது நாட்டிற்கு பெண்கள் பெரும் பங்களிப்பை செய்துள்ளதாக கூறிய மோடி, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்களுக்கு தலைவணங்குவதாகவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார் மோடி.