கோல சிலாங்கூர், பிப். 21- கடந்த 2012ஆம் ஆண்டில் யூபிஎஸ்ஆர் தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற புக்கிட் மெலாவத்தி தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா வரும் 24.2.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கோல சிலாங்கூர் ‘இன்பென்ஸ்’ கல்லூரி அரங்கத்தில் நடைபெறும்.
புக்கிட் மெலாவத்தில் சட்ட மன்ற உறுப்பினர் பொறியளாளர் முத்தையா மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்குவார்.
யுசிடிஐ பல்கலைகழக விரிவுரையாளர் கோபிநாத் மாணிக்கம் மாணவர்களுக்குத் தன்முனைப்பு உரையாற்றுவார்.
கோலா சிலாங்கூர் மாவட்டத் தமிழ்க் கலை, பண்பாட்டு இலக்கியக் கழகமும் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினரின் சேவை மையமும் இணைந்து நடத்தும் இவ்விழாவிற்கு மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினரின் சார்பில் ஆ.குணநாதன் கேட்டுக் கொள்கிறார்.