Home வாழ் நலம் மூட்டு வலியை நீக்கும் உருளைகிழங்கு சாறு!

மூட்டு வலியை நீக்கும் உருளைகிழங்கு சாறு!

941
0
SHARE
Ad

ht2441ஆகஸ்ட் 16 – உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது.

பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.

#TamilSchoolmychoice

articleமேலும் அதிக எடை உள்ள பொருட்களை தூக்கினால் தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலி அல்லது சுளுக்கு ஏற்பட்டு பாடாய் படுத்திவிடும்.

ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இவற்றைதடுக்கும் முறைகளை கீழே பார்போம்.
மூட்டு வலியை தடுக்கும் முறைகள்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

potato2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. இரண்டு கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும்.
potato-juice6. ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப் பழக்கம்:

1. வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.

2. காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

3. கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.