Home உலகம் சீன நிலக்கரி சுரங்கத்தில் புதைந்த 27 தொழிலாளர்கள் – இருவர் பிணமாக மீட்பு!

சீன நிலக்கரி சுரங்கத்தில் புதைந்த 27 தொழிலாளர்கள் – இருவர் பிணமாக மீட்பு!

500
0
SHARE
Ad

chinaபெய்ஜிங், ஆகஸ்ட் 22 – சீனாவின் யுனான் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றின் நுழைவு வாயில் பகுதி, கன மழை காரணமாக இடிந்து விழுந்ததில் அங்கு வேலை பார்த்து வந்த 27 தொழிலாளர்கள் உயிருடன் மண்ணில் புதைந்தனர். அவர்களில் இருவர் பிணமாக மீட்கப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது.

சீனாவில் தற்போது பெரும்பான்மையான இடங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. குறிப்பாக நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ள பகுதியான யுனான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

இதில் தொழிலாளர்கள் பணி செய்து வந்த ஒரு சுரங்கத்திற்குள் மழை வெள்ளம் புகுந்ததால், அங்கு ஏற்பட்ட வெடி விபத்தில், சுரங்கத்தின் நுழைவு வாயில் முற்றிலும் இடிந்து விழுந்தது.

#TamilSchoolmychoice

இதனால் அங்கு பணியில் இருந்து 27 தொழிலாளர்களும் உயிரோடு மண்ணில் புதைந்து போயினர். தகவல் அறிந்து சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் உடனடியாகத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

chinaaஇதுவரை 2 தொழிலாளர்கள் மட்டும் பிணமாக மீட்டகப்பட்டுள்ளனர். ஏனைய 25 பேரின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாக சீன காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜிக்கி என்ற பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 20–க்கும் மேற்பட்டோர் புதைந்து போயினர். அவர்களில் இதுவரை 9 பேர் மட்டுமே மீட்கப் பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.