Home கலை உலகம் ‘தல 55’ படத்தில் அஜீத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

‘தல 55’ படத்தில் அஜீத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

649
0
SHARE
Ad

ajithசென்னை, ஆகஸ்ட் 22 – கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ‘தல 55” படத்தில், அவருக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. இந்தப் படத்துக்காக அவருக்கு ரூ 40 (மலேசிய ரிங்கிட் 2,22,20,000) கோடி ஒரே தவணையில் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் வருமான வரியாக மட்டுமே ரூ 12 கோடியை செலுத்திய அஜீத், மீதித் தொகையை காசோலை மூலம் ‘வெள்ளை’யாகவே பெற்றுள்ளார் என்பதுதான் சிறப்பு.

Thala55தமிழ் சினிமாவில் தன் சம்பளத்தை முழுக்க முழுக்க வெள்ளையாகவே பெற்றுக் கொள்ளும் நடிகர்கள் அபூர்வம். ரஜினி தன் சம்பளத்தில் வருமான வரி செலுத்தியது போக, மீதித் தொகையை காசோலை மூலமே பெற்றுக் கொள்கிறார்.

#TamilSchoolmychoice

பல ஆண்டுகளாக இது தொடர்கிறது. இப்போது அஜீத்தும் சம்பளத்தை காசோலை மூலம் பெற்றுக் கொள்கிறார். இப்போது அவர் நடித்து வரும் தல 55-படத்துக்கு அவரது சம்பளம் ரூ 40 கோடி என்று தெரியவந்துள்ளது.

thala-gowthamஇதில் வருமான வரி பிடித்தம் போக ரூ 28 கோடி அவருக்கு தரப்பட்டுள்ளதாம். அஜீத் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு சம்பளமாக ரூ 50 கோடி என பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.