Home கலை உலகம் சினிமாவில் ஒரு பாட்டு பாட சிம்புவுக்கு ரூ.2 லட்சம்

சினிமாவில் ஒரு பாட்டு பாட சிம்புவுக்கு ரூ.2 லட்சம்

613
0
SHARE
Ad

simbuசென்னை, பிப்.22- சிம்பு நடிப்பதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய படங்களில் பாடலும் பாடி வந்தார்.

பிற நடிகர்கள் நடிக்கும் படங்களிலும் பாடி வருகிறார். இவர் குரலில் ‘லூசுப் பெண்ணே’, ‘யம்மாடி ஆத்தாடி’, ‘நலம்தானா’, ‘வச்சிக்கவா உன்னை மட்டும்’, ‘லவ் பண்ணலாமா வேண்டாமா’, ‘போட்டு தாக்கு’ போன்ற  பல பாடல்கள் வெற்றியடைந்துள்ளன.

இதனால் புதுமுக இயக்குனர்கள் பலர் தங்கள் படங்களுக்கு பாட சிம்புவை அழைக்கிறார்கள். இதனால் பாட்டுக்கு சம்பளம் நிர்ணயித்துள்ளார். ஒரு பாடல் பாட ரூ.2 லட்சம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

சிம்பு பாடல்கள் வெற்றியடைவதால் கேட்ட தொகையை தயாரிப்பாளர்கள் கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே படங்களில் பாடுவது குறித்து சிம்பு கூறும் போது, என்னை நான் முழு நேர பாடகனாக கருதவில்லை. செலவை சமாளிக்கவே பாடுகிறேன் என்றார்.