Home இந்தியா ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம் – விஜயகாந்த் கண்டனம்

ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம் – விஜயகாந்த் கண்டனம்

626
0
SHARE
Ad

vijaykanthசென்னை, பிப்.22-  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐதராபாத்தில் மக்கள் கூடும் நெரிசலான பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

இந்திய அரசின் உளவுத்துறை இரண்டு தினங்களுக்கு முன்பே இத்தகைய வெடிகுண்டு சம்பவங்கள் பெரு நகரங்களில் ஏற்பட வாய்ப்புண்டு என்று எச்சரிக்கை செய்து இருந்தது.

#TamilSchoolmychoice

இருப்பினும், இத்தகைய நிகழ்ச்சி தடுக்கப்படவில்லை என்பது கண்டனத்திற்கு உரியதாகும்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இத்தகைய சம்பவங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அகில உலக விசுவ இந்து பரிஷத் ஆலோசகர் எஸ்.வேதாந்தம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.