Home கலை உலகம் சுந்தர்.சி உடன் சண்டையா?- ராய் லட்சுமி விளக்கம்

சுந்தர்.சி உடன் சண்டையா?- ராய் லட்சுமி விளக்கம்

1200
0
SHARE
Ad

sundar-cசென்னை, ஆகஸ்ட் 26 – அரண்மனை படத்தில் தனது காட்சிகள் குறைக்கப்பட்டதால் இயக்குநர் சுந்தர்.சி உடன் விவாதத்தில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை கடுமையாக மறுத்துள்ளார் ராய் லட்சுமி.

ராய் லட்சுமி தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் வருகிறார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களை மையப்படுத்திதான் கதையே நகருவதால் மற்ற பாத்திரங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு காட்சிகள் வெட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

#TamilSchoolmychoice

ராய் லட்சுமி, வினய், ஆண்ட்ரியா ஆகியோர் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளை சுந்தர்.சி நீக்கிவிட்டதாகவும், இதனால் ராய் லட்சுமி சுந்தர்.சி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

இதை ராய் லட்சுமி முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட விளக்கக் குறிப்பில், “அரண்மனை’ படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் வதந்திதான்.நான் படத்தைப் பார்த்தேன். அதில், என்னுடைய காட்சிகள் எதுவும் நீக்கப்படவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. எனக்கும் சுந்தர்.சிக்கும் இடையே எவ்வித மோதலும் இல்லை.நான் நடித்துள்ள ‘அரண்மனை’ ‘இரும்பு குதிரை’ ஆகிய படங்கள் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” என்று கூறியுள்ளார் ராய் லட்சுமி.