Home நாடு பாஸ் ஆதரவு இல்லாவிட்டாலும் வான் அசிசா மந்திரி பெசார் ஆவார் – ரபிசி கருத்து

பாஸ் ஆதரவு இல்லாவிட்டாலும் வான் அசிசா மந்திரி பெசார் ஆவார் – ரபிசி கருத்து

603
0
SHARE
Ad

Wan Azizah Bin Wan Ismailகோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில், சுல்தானின் முடிவே இறுதியானது என்று பாஸ் கட்சி உட்பட அனைவரும் முடிவு எடுத்துள்ள நிலையில், இன்று மதியம் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் சிலாங்கூர் சுல்தானை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு, நிச்சயம் இந்த விவகாரத்திற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என்று அக்கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

இந்நிலையில், பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா மந்திரி பெசார் ஆவதற்கு சிலாங்கூரைச் சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியைச் சேர்ந்த 13 சட்டமன்ற உறுப்பினர்கள் சிலாங்கூர் சுல்தானின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

rafizi56 இடங்களைக் கொண்ட சிலாங்கூர் சட்டமன்றத்தில், பிகேஆர் கட்சிக்கு 14 இடங்களும், ஜசெகவுக்கு 15 இடங்களும், பாஸ் கட்சிக்கு 15 இடங்களும் உள்ளது.

இதில் பிகேஆர், ஜசெக மற்றும் பாஸ் கட்சியில் இருந்து இருவர் என மொத்தம் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வான் அசிசாவிற்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாக சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மீதமுள்ள பாஸ் கட்சியின் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் முடிவே தங்களின் முடிவு என்று அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிகேஆர் வியூக இயக்குநர் ரபிசி ரம்லி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “43 உறுப்பினர்களில் 30 பேர் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். வான் அசிசா மந்திரி பெசார் ஆவதற்கு இதுவே போதுமான பெரும்பான்மை ஆதரவு. பாஸ் கட்சியில் இருந்து அந்த 13 உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும் வான் அசிசா மந்திரி பெசாராக ஆக முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

சுல்தான் சந்திப்பு

Kalidh

இந்த அரசியல் நெருக்கடியான சூழலை சமாளிக்க காலிட் இப்ராகிம் சுல்தானை சந்தித்து ஆலோசனை பெறவுள்ளார். சுல்தானின் முடிவுக்குப் பிறகே காலிட் தனது முடிவை அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது.

மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் மறுதேர்தல் நடத்தப்படுமா? காலிட் இப்ராகிமே மந்திரி பெசாராக தொடரட்டும் என்று அரண்மனை கட்டளையிடுமா? போன்ற கேள்விகளுக்கு இன்னும் சில மணி நேரங்களில் பதில் தெரிந்துவிடும்.