ஜப்பானில் உள்ள கியாடோ நகருக்கு முதலில் சென்ற மோடிக்கு ஜப்பான் பிரதமர் விருந்தளித்தார். பின்னர் தலைநகர் டோக்யோ சென்ற மோடிக்கு, அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு ஜப்பான் பிரதமருடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை அடிப்படையில் இருதரப்பு நாடுகளிடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, சிவில், அணுசக்தி உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் நல்லுறவு வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுதிடப்பட்டன.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. தமது பயணம் பற்றி அறிக்கை வெளியிட்ட மோடி, ‘இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் உருவாகும், இரு நாடுகளிடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, சிவில், அணுசக்தி உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் நல்லுறவு வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்.