Home தொழில் நுட்பம் பென் டிரைவில் மறைந்த கோப்புகளை மீட்பதற்கான வழிகள்!

பென் டிரைவில் மறைந்த கோப்புகளை மீட்பதற்கான வழிகள்!

556
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 02 – கணிப்பொறியைப் பற்றி அறிந்தவர்களுக்கு ‘பென் டிரைவ்’ (​Pen Drive)-ன் பயன்பாடுகள் பற்றியோ அதன் செயல்பாடுகள் பற்றியோ நீண்ட விளக்கங்கள் தேவை இல்லை. இந்த கட்டுரையில் பென் டிரைவ்களில் சேமித்து வைத்துள்ள தரவுகள், வைரஸ்களின் தாக்கம் காரணமாக மறைந்து போனால் அவற்றை எவ்வாறு மீட்கலாம் என்பதை விரிவாகக் காணலாம்.

1கணிப்பொறிகளினால் எந்த அளவிற்கு பயன் உள்ளதோ அதே அளவிற்கு பாதுகாப்புக் குறைபாடுகளும் உள்ளன. பொழுதுபோக்கிற்காகவோ அல்லது சுயநல நோக்கத்திற்காகவோ தகவல் திருடர்கள் இணையம் மற்றும் கணிபொறிகளில் தேவையற்ற நிரல்களை பரப்பி விடுகின்றனர். இது கணிப்பொறி மட்டும் அல்லாமல் இன்னும் பிற சாதனங்களை பெரிதும் பாதிக்கின்றது. அதில் குறிப்பிடத்தக்கவை பென் டிரைவ்கள் ஆகும்.

2நாம் முக்கியமானதாக கருதும் கோப்புகள் மற்றும் ஆவணங்களை நம் பென் டிரைவ்களில், எதிர்காலத் தேவைகளைக் கருதி சேமித்து வைப்போம். இவற்றை, ஒரு பொது பயன்பாட்டில் உள்ள கணினியில் பயன்படுத்தும் பொழுது., அந்த கணினியில் உள்ள வைரஸ் மற்றும் மால்வேர் நிரல்களின் காரணமாக அனைத்து கோப்புகளும் மறைந்து போய், நம் கோப்புகள் மற்றும் ஆவணங்களுக்கான ‘குறுவழிகள்’ (Shortcuts) மட்டுமே இருக்கும். மேலும், குறிப்பிட்ட அந்த கோப்புகளுக்கான ‘கொள்திறன்’ (Capacity) 1 கேபிக்கும் குறைவானதாகவே இருக்கும்.

#TamilSchoolmychoice

3இந்த மாதிரியான சூழலில் நாம் உடனடியாக பென் டிரைவினை ‘ஃபார்மட்’ (Format) செய்து விடக் கூடாது. மறைந்து போன தரவுகள் மீண்டும் பெறுவதற்கு, முதலில் நாம் நம் கணினியில் ‘யுஎஸ்பி’ (USB)-க்கான டிரைவ் எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பின்னர், ரன் கட்டளைக்கு சென்று CMD என தட்டச்சு செய்ய வேண்டும். அந்த கட்டளை நம்மை ‘டாஸ் பிராம்ப்ட்’ (DOS prompt) சாளரத்திற்கு இட்டுச் செல்லும். அங்கு யுஎஸ்பிக்கான ட்ரைவை தட்டச்சு செய்யது, DIR/AD என தட்டச்சு செய்தால், மறைக்கப்பட்டு அனைத்து கோப்புகளும் நமக்குத் தெரியவரும். இருப்பது தெரியும்.

இவற்றை மீட்க, டாஸ் பிராம்ப்ட்டில் Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை தட்டச்சு செய்தால், கோப்புகள் அனைத்தும் மீட்கப்பட்டுவிடும். அந்த கோப்புகளில் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகளை நீக்கிவிடலாம்.