ஜெனிவா, செப்டம்பர் 02 – ஐ.நா மனித உரிமைகள் ஆணையராக கடந்த 6 ஆண்டு காலம் பதவி வகித்த நவநீதம்பிள்ளை நேற்று முன்தினம் தம் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
நேற்று முன்தினத்தோடு தனது பணிகாலம் முடிவடைந்த நிலையில், இலங்கைக்கு எதிராக, போர் குற்ற விசாரணையை நடத்திவரும் குழு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற நவிபிள்ளை, சர்வதேச நிறுவனம் ஒன்றில் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க நவநீதம் பிள்ளை கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவநீதம்பிள்ளை ஒய்வு பெற்றுள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பிற்கு, ஏற்கனவே ஐ.நா சார்பில் தேர்வாகியுள்ள, ஜோர்டன் நாட்டின் இளவரசர் சையத் அல் ஹூசைன் இன்று முறைப்படி பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.