Home தொழில் நுட்பம் விண்டோஸ் அல்லாத புதிய இயங்குதளத்தை தயாரிக்கும் சீனா!

விண்டோஸ் அல்லாத புதிய இயங்குதளத்தை தயாரிக்கும் சீனா!

547
0
SHARE
Ad

Windows-8பெய்ஜிங், செப்டம்பர் 3 – அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை முற்றிலுமாக புறக்கணிக்க நினைக்கும் சீனா, உள்நாட்டில் தயாராகி வரும் இயங்குதளத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீன அரசின் செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியாகும், உள்நாட்டு இயங்குதளங்களை விரைவில் திறன்பேசிகளிலும் செயல்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

எனினும்,  அந்த இயங்குதளத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

சீனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர், விண்டோஸ் 8 இயங்குதளங்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தத் தடை விதித்தது. இதற்கு முக்கிய காரணம், சீனாவில் தீவிரவாதத்தை ஏற்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு விண்டோஸ் 8-ன் சில ஆக்கக்கூறுகள் பயன்படும் வகையில் இருப்பதாக சீனா குற்றம் சாட்டியது.

அதேபோல் ஐபிஎம் நிறுவனத்தின் சர்வர்கள், கூகுளின் முக்கியப் பயன்பாடுகள், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் என அனைத்தும் சீனாவின் தேசிய நலனுக்கு அச்சுறுத்துவதாக உள்ளது என சீனா அரசு குற்றம்சாட்டி உள்ளது. இதன் காரணமாக முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும் சீனாவில் வர்த்தகம் செய்வதற்கான வசதிகளையும் போக்குகளையும் படிப்படியாக இழந்து வருகின்றன.

இந்த நிலையில், விண்டோசை விடுத்து சீனா புதிய இயங்குதளத்தை தயாரித்து வருவதால், சீனாவில் மிகப்பெரும் வர்த்தகத்தை கொண்டிருக்கும் மைக்ரோசாஃப்ட் கடுமையான வர்த்தக பாதிப்புக்கு உள்ளாகும் எனக் கூறப்படுகின்றது.